தமிழ் பாய்ச்சு யின் அர்த்தம்

பாய்ச்சு

வினைச்சொல்பாய்ச்ச, பாய்ச்சி

 • 1

  (பயிர், செடி போன்றவற்றிற்கு) நீர் செல்லும்படி செய்தல்; இறைத்தல்.

  ‘கிணற்றில் தண்ணீர் குறைந்துவிட்டதால் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை’

 • 2

  (நாளங்களின் வழியே இரத்தத்தை இதயம்) செலுத்துதல்.

  ‘இதயம் சுருங்கும்போது இரத்தம் பாய்ச்சப்படுகிறது’

 • 3

  (மின்சாரத்தை) செலுத்துதல்; (ஒளியை) வீசுதல்.

  ‘பாதுகாப்புக்காகத் தோட்ட வேலிகளில் மின்சாரம் பாய்ச்சுவது சட்டப்படி குற்றம்’
  ‘மைதானத்தில் கண்களைக் கூசச் செய்யும் வகையில் மின்விளக்குகள் ஒளியைப் பாய்ச்சின’

 • 4

  உயர் வழக்கு (ஈட்டி, கத்தி போன்றவற்றை) குத்தி உள் இறக்குதல்.

 • 5

  (நங்கூரத்தை) இறக்குதல்; போடுதல்.