தமிழ் பார்க்கிலும் யின் அர்த்தம்

பார்க்கிலும்

இடைச்சொல்

  • 1

    ‘காட்டிலும்’ என்ற பொருளில் ஒன்றை அல்லது ஒருவரை ஒன்றுடன் அல்லது ஒருவருடன் ஒப்பிடும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; ‘விட’.

    ‘முன்னைப் பார்க்கிலும் அவள் இப்போது அழகாக இருக்கிறாள்’
    ‘பாடத்தை மனப்பாடம் செய்வதைப் பார்க்கிலும் புரிந்து படிப்பதே நல்லது’