தமிழ் பார்த்து யின் அர்த்தம்

பார்த்து

வினையடை

 • 1

  கவனமாக; கருத்தில் கொண்டு.

  ‘பாதை கரடுமுரடாக இருக்கும், பார்த்துப் போ’
  ‘நமக்கு வேண்டியவர், பார்த்து விலை சொல்லுங்கள்’
  ‘பரீட்சை வருகிறது, பார்த்துப் படி’
  ‘இந்த இடத்தில் ரவுடிகள் தொல்லை அதிகம், பார்த்து இருந்துகொள்’

தமிழ் பார்த்து யின் அர்த்தம்

பார்த்து

இடைச்சொல்

 • 1

  ‘வேண்டுமென்றே செய்ததுபோல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நாம் வெளியே புறப்படுகிற நேரம் பார்த்துத்தானா அவர் வர வேண்டும்?’
  ‘வேறு புத்தகம் கிடைக்கவில்லையா? இதைப் பார்த்து வாங்கிவந்திருக்கிறாயே!’

 • 2

  ‘நோக்கி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கிழக்குப் பார்த்து உட்கார்ந்திருந்தாள்’

 • 3

  ‘(ஒன்றை அல்லது ஒருவரை) நேருக்கு நேராக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘‘அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று அவைத்தலைவர் கூச்சலிட்ட உறுப்பினர்களைப் பார்த்து எச்சரித்தார்’