தமிழ் பார்த்துக்கொள் யின் அர்த்தம்

பார்த்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  பொறுப்போடு கவனித்துக்கொள்ளுதல்.

  ‘நீ வீட்டில் இல்லாதபோது குழந்தையை யார் பார்த்துக்கொள்கிறார்கள்?’
  ‘வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஊருக்குப் போய்விட்டார்’

 • 2

  ஒன்று நிறைவேறுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்; பிரச்சினை ஏற்படுத்தும் ஒன்றை அல்லது ஒருவரைச் சமாளித்தல்.

  ‘விஷயத்தை அவரிடம் சொன்னால் போதும், மீதியை அவர் பார்த்துக்கொள்வார்’
  ‘நீ கவலைப்படாதே, அவனை நான் பார்த்துக்கொள்கிறேன்’
  ‘விண்கலம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழாதவாறு பார்த்துக்கொள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள்’