தமிழ் பாரம்பரியம் யின் அர்த்தம்

பாரம்பரியம்

பெயர்ச்சொல்

 • 1

  (பண்பாடு, கலை, இலக்கியம் முதலியவற்றில்) தொன்மையான, நீண்ட மரபு.

  ‘தெருக்கூத்து ஒரு பாரம்பரியம் மிக்க கலை’
  ‘பாரம்பரியப் பெருமைகள் பேசுவதில் பயன் இல்லை’
  ‘நவீன ஓவியத்துக்குச் செறிவான பாரம்பரியம் உண்டு’
  ‘இந்தக் கல்லூரிக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது’

 • 2

  வம்சம்; பரம்பரை.

  ‘எங்களுடைய பாரம்பரியம் சரபோஜி மன்னருடைய காலத்துக்கு முற்பட்டது’

 • 3

  தலைமுறைதலைமுறையாக வந்த சிறப்பு.

  ‘பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்’

 • 4

  ஒரு குருவை அல்லது ஒரு துறையின் முன்னோடியைப் பின்பற்றுபவர்களின் தொடர்ச்சியான வரிசை; பரம்பரை.

  ‘பாரதிதாசன் பாரம்பரியத்தைச் சேர்ந்த கவிஞர் இவர்’
  ‘வீணை தனம்மாளின் பாரம்பரியத்தில் வந்தவர்களில் முக்கியமானவர் சாவித்திரி ராஜன்’

 • 5

  உயிரியல்
  உயிரினங்களின் மரபணுக்களில் படிந்து வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் உருவம், குணம், தன்மை போன்றவை.