தமிழ் பார்வை யின் அர்த்தம்

பார்வை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பார்க்கும் செயல்; பார்த்தல்.

  ‘அவளுடைய பார்வை தன் மீது பட்டதை உணர்ந்தான்’
  ‘சிறுவனின் சோகம் கலந்த பார்வை மனத்தைத் துன்புறுத்தியது’

 • 2

  பார்க்கும் திறன்.

  ‘வயதானால் பார்வை குறைந்துவிடுகிறது’
  ‘ஒரு விபத்தினால் அவரது பார்வை பறிபோயிற்று’

 • 3

  (தலைவர்கள், நடிகர்கள், மதத் தலைவர்கள் போன்றோர் இறந்தால் அவர்கள் உடலுக்கு) பொது இடத்தில் மக்கள் வந்து அஞ்சலி செலுத்துதல்.

  ‘தலைவரின் பூதவுடல் பொதுமக்களின் பார்வைக்காக மண்டபத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது’

 • 4

  (விற்பனைக்காக அல்லாமல்) காட்சிக்காக மட்டும் என்ற ஏற்பாடு.

  ‘ரவிவர்மா வரைந்த படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக நான்கு நாட்கள் வைக்கப்படும்’

 • 5

  தோற்றம்/எடுப்பான தோற்றம்.

  ‘வெற்றிலைக் கொடியும் மிளகுக் கொடியும் பார்வைக்கு ஒன்று போலவே இருக்கும்’
  ‘வீடு பார்வையாக இருக்கிறது’

 • 6

  மேற்பார்வை; கவனம்.

  ‘பிரதமருக்கான மதிய உணவு எனது நேரடிப் பார்வையில் தயாரிக்கப்பட்டது’
  ‘மேலதிகாரியின் பார்வைக்குக் கோப்பு அனுப்பப்பட்டிருக்கிறது’

 • 7

  (ஒரு விஷயத்தை) அணுகும் முறை; கண்ணோட்டம்.

  ‘இந்தப் பிரச்சினையில் உனது பார்வை சரி இல்லை’
  ‘இந்த நூலைப் பொறுத்தவரை உங்கள் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கிறது’