பாராட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாராட்டு1பாராட்டு2

பாராட்டு1

வினைச்சொல்பாராட்ட, பாராட்டி

 • 1

  உயர்வாகக் கூறுதல்; புகழ்தல்.

  ‘அவருடைய மருத்துவச் சேவையைப் பாராட்டி விழா எடுப்பது என்று முடிவுசெய்தார்கள்’
  ‘துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரரை எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டின’
  ‘அனைவராலும் பாராட்டப்படும் ஓவியம்’

 • 2

  (கௌரவம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து) பொருட்படுத்துதல்.

  ‘அவர் எல்லோரிடமும் எந்த வித வித்தியாசமும் பாராட்டாமல் பழகுவார்’
  ‘இருவருமே கௌரவம் பாராட்டிக்கொண்டிருந்தால் பிரச்சினை முடியப்போவதில்லை’

 • 3

  (சொந்தம், உரிமை) கொண்டாடுதல்.

  ‘கையில் பணம் இருந்தால் ஆயிரம் பேர் சொந்தம் பாராட்டுவார்கள்’

பாராட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாராட்டு1பாராட்டு2

பாராட்டு2

பெயர்ச்சொல்

 • 1

  (பேச்சில் அல்லது எழுத்தில் ஒருவரை) பாராட்டும் செயல்; புகழ்ச்சி.

  ‘தேசிய விருது பெற்ற தலைமை ஆசிரியருக்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது’
  ‘சர்வதேசத் திரைப்பட விழாவில் பலருடைய பாராட்டையும் பெற்ற இந்தியத் திரைப்படம் இது’

 • 2

  (பெரும்பாலும் பன்மையில்) வாழ்த்து.

  ‘உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!’