தமிழ் பாராமுகம் யின் அர்த்தம்

பாராமுகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவரை) பார்த்தும் பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாமல் இருப்பது.

  ‘உதவி கேட்டுவிடுவானோ என்று நினைத்துப் பாராமுகமாக உட்கார்ந்திருந்தார்’

 • 2

  வேண்டுமென்றே புறக்கணிக்கும் போக்கு; கண்டுகொள்ளாத நிலை; அலட்சியம்.

  ‘தொழிலாளர் பிரச்சினையில் அரசு பாராமுகமாக இருக்கவில்லை’
  ‘இந்தப் பிரச்சினையில் நீங்களும் ஏன் பாராமுகமாக இருக்கிறீர்கள்?’