தமிழ் பால் யின் அர்த்தம்

பால்

பெயர்ச்சொல்

 • 1

  (பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது பெண் விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.

  ‘தாய்ப் பால்’
  ‘பசும் பால்’
  ‘ஆட்டுப் பால்’
  ‘பால் இல்லாத காப்பி’

 • 2

  (கள்ளி, ரப்பர் முதலியவற்றினுள் உள்ள) பிசுபிசுப்பான வெள்ளை நிறத் திரவம்.

  ‘ரப்பர் மரத்தை அடியில் சிறிது வெட்டிவிட்டு அதிலிருந்து வடியும் பாலைச் சேகரிப்பார்கள்’
  ‘கள்ளியின் தண்டை முள்ளால் குத்தியதும் பால் வடிந்தது’

 • 3

  (தேங்காய்த் துருவல் போன்றவற்றை) பிழிந்தெடுப்பதன் மூலம் பெறும் வெள்ளை நிறத் திரவம்.

  ‘சுரைக்காய் கூட்டுக்குக் கொஞ்சம் தேங்காய்ப் பால் ஊற்று’

 • 4

  சிமிண்டு, சுண்ணாம்பு போன்றவை தண்ணீரில் கரைந்திருக்கும் நிலை.

  ‘சிமிண்டுப் பாலை நிறைய ஊற்றினால்தான் தரை வழவழப்பாக இருக்கும்’

தமிழ் பால் யின் அர்த்தம்

பால்

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதரிலும், பெரும்பாலான பிற உயிரினங்களிலும்) ஆண், பெண் என்ற பகுப்பு.

  ‘சிறுவர் முதல் பெரியவர்கள்வரை பால் பேதமின்றி விழாவில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்’
  ‘ஒரு பால் உயிரினங்கள்’

 • 2

  இலக்கணம்
  உயர்திணையில் ஆண், பெண், பலர் என்ற, அஃறிணையில் ஒன்று, பல என்ற ஐந்து வகைப் பிரிவுகளில் ஒன்று.

  ‘அவன் என்பது ஆண்பால், அவள் என்பது பெண்பால்’