தமிழ் பாளம் யின் அர்த்தம்

பாளம்

பெயர்ச்சொல்

 • 1

  (மண், பனி, உலோகம் போன்றவற்றின்) கனத்த தகடு போன்ற கட்டி.

  ‘மழை இல்லாததால் வயல்வெளிகள் பாளம்பாளமாக வெடித்திருந்தன’
  ‘நிலக்கரியைப் பாளம்பாளமாக வெட்டியெடுத்தார்கள்’
  ‘இரும்புப் பாளங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்’
  ‘மேலை நாடுகளில் பனிப் பாளங்கள் வாகனங்களின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்துகின்றன’