தமிழ் பாளையம் யின் அர்த்தம்

பாளையம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசனுக்காக வரி வசூலிக்கவும் போரில் உதவவும்) ஒரு தலைவனின் பொறுப்பில் விடப்பட்ட கிராமங்களின் தொகுதி.

    ‘அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் கிழக்குப் பாளையங்கள், மேற்குப் பாளையங்கள் என இரு பிரிவுகள் இருந்தன’
    ‘பாண்டியநாடு 32 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது’