தமிழ் பாழ் யின் அர்த்தம்

பாழ்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று) பயனற்றதாக ஆன நிலை; வீண்.

  ‘உன் பொறுப்பற்ற செய்கையால் இவ்வளவு நேரம் நான் செய்ததெல்லாம் பாழ்’

 • 2

  நாசம்.

  ‘வெள்ளத்தில் மூழ்கிப் பயிர்களெல்லாம் அடியோடு பாழ்!’

 • 3

  பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பது.

  ‘பாழ் கிணறு’
  ‘பாழ் மண்டபம்’

 • 4

  வெறுமையானது.

  ‘பாழ் நிலம்’
  ‘பாழ் வெளி’