தமிழ் பாழாக்கு யின் அர்த்தம்

பாழாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

 • 1

  (பணத்தை) உபயோகமற்ற வழியில் செலவழித்தல்/(ஒரு பொருளை) வீணாக்குதல்; வீணடித்தல்.

  ‘சொத்தையெல்லாம் குடித்தே பாழாக்குகிறான்’
  ‘சமைக்கத் தெரியாமல் காய்கறியை எல்லாம் பாழாக்கிவிட்டாயே’

 • 2

  (ஒன்றின்) நல்ல தன்மையை இழக்கச் செய்தல்; கெடுத்தல்.

  ‘தொழிற்சாலைக் கழிவுகளால் விளைநிலங்கள் பாழாக்கப்படுகின்றன’