தமிழ் பாவத்தைக் கட்டிக்கொள் யின் அர்த்தம்

பாவத்தைக் கட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    ஒருவர் பிறருக்குத் தீங்கு செய்வதன்மூலம் பாவத்தைத் தேடிக்கொள்ளுதல்.

    ‘முதியவரை அலைக்கழித்து அவர் பாவத்தைக் கட்டிக்கொள்ளாதே’
    ‘செய்த வேலைக்குக் கூலி தராமல் ஏன் தொழிலாளிகளின் பாவத்தைக் கட்டிக்கொள்கிறாய்?’