தமிழ் பாவத்தைக் கொட்டிக்கொள் யின் அர்த்தம்

பாவத்தைக் கொட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒருவர்) எரிச்சல், கோபம், வருத்தம் அடைவதற்குக் காரணமாக இருத்தல்.

    ‘அந்தப் பச்சைக் குழந்தையை அழவிட்டு, ஏன் அதன் பாவத்தைக் கொட்டிக்கொள்கிறாய்?’
    ‘பெற்றவர்கள் பாவத்தைக் கொட்டிக்கொள்ளாதே. நீ நன்றாக இருக்க முடியாது’