தமிழ் பாவம் யின் அர்த்தம்

பாவம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்/மேற்குறிப்பிட்டவற்றால் அடைகிற தீய பலன்; புண்ணியத்துக்கு எதிரானது.

  ‘வயதான பெற்றோரைப் பராமரிக்காதது பாவம் என்று இந்து மதம் கருதுகிறது’
  ‘‘நம்பிக்கைத் துரோகத்தைவிடப் பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை’ என்றார்’
  ‘‘போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ, இப்படித் தவிக்கிறேன்’ என்று அவர் அலுத்துக்கொண்டார்’
  ‘நீ செய்த பாவத்துக்குப் பரிகாரமே கிடையாது’

தமிழ் பாவம் யின் அர்த்தம்

பாவம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  ஒருவர் தன் இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல்.

  ‘ஐயோ பாவம், எவ்வளவு கஷ்டப்படுகிறான்! பாவம் அவன், வேலை கிடைத்த இரண்டாம் நாளே மோசமான விபத்து’
  ‘பாவம், பணம் இல்லாமல் அவன் ரொம்பவும் திண்டாடுகிறான்’

 • 2

  பரிதாபம்.

  ‘அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது’
  ‘என்னைப் பார்க்க பாவமாக இல்லையா உங்களுக்கு?’

தமிழ் பாவம் யின் அர்த்தம்

பாவம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  உணர்ச்சி வெளிப்பாடு.

  ‘செய்தியைக் கேட்ட பின் அவர் முகத்தில் எந்த வித பாவமும் இல்லை’

 • 2

  (நாட்டியத்தில்) முகத்தில் காட்டப்படும் உணர்ச்சி.

 • 3

  (ஒரு படைப்பில்) தான் கூற வருவதை வெளிப்படுத்த ஒரு உறவைக் கற்பித்துக்கொள்ளும் முறை.

  ‘இந்தச் செய்யுள் குருசீட பாவத்தில் கூறப்பட்டிருக்கிறது’
  ‘நாயகன்நாயகி பாவம்’

 • 4

  இசைத்துறை
  ஸ்வர அமைப்பினால் ஒரு ராகம் வெளிப்படுத்தும் உணர்ச்சி.

  ‘ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பாவம் உண்டு’

உச்சரிப்பு

பாவம்

/(b-)/