பாவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவு1பாவு2

பாவு1

வினைச்சொல்பாவ, பாவி

 • 1

  (கல், பலகை போன்றவற்றைத் தளத்தில் அல்லது ஓடுகளைக் கூரையில் வரிசையாக) பதித்தல் அல்லது பரப்புதல்.

  ‘கருங்கல் பாவிய முற்றம்’
  ‘சீமை ஓடு பாவியிருந்த கூரை’

 • 2

  (தரையில் கால்) படுதல் அல்லது பதிதல்.

  ‘பேய்களுக்குத் தரையில் கால் பாவாது என்பாள் பாட்டி’
  ‘இந்தக் காட்டில் என் கால் பாவாத இடமே இல்லை’

 • 3

  (விதைகளை) பரந்து விழச் செய்தல்.

  ‘நாற்றங்காலில் அடியுரம் இட்ட பிறகு விதை பாவினார்கள்’

பாவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவு1பாவு2

பாவு2

பெயர்ச்சொல்

 • 1

  (தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை.