வினைச்சொல்
- 1
எலும்பு மூட்டு இருக்கும் இடத்தை விட்டுச் சற்று விலகுதல்; நழுவுதல்.
‘இப்படிக் கண்டபடியெல்லாம் யோகாசனம் செய்தால் கழுத்து பிசகிவிடும்’‘பயிற்சி ஆட்டத்தின்போது தோள்பட்டை பிசகிவிட்டதால் நான் போட்டியில் கலந்துகொள்ளவில்லை’ - 2
(சீரான போக்கு, ஒழுங்கு முதலியவற்றிலிருந்து) விலகுதல்; தவறுதல்.
‘இந்த அறுவைச் சிகிச்சையில் சற்றுப் பிசகினாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்’‘வாடகையை மட்டும் தேதி பிசகாமல் அவர் கொடுத்துவிடுவார்’உரு வழக்கு ‘உனக்குப் புத்தி பிசகிவிட்டதா என்ன? ஏன் இப்படி உளறுகிறாய்?’ - 3
இசைத்துறை
(சுருதி, தாளம் போன்றவை) முறையான போக்கிலிருந்து விலகுதல் அல்லது பிறழ்தல்.‘பாட்டில் ஓர் இடத்தில் தாளம் பிசகிவிட்டது’
பெயர்ச்சொல்
- 1
தவறு.
‘உன்னிடம் இந்த வேலையை ஒப்படைத்தது பிசகுதான்’ - 2
ஒழுங்கைக் குலைக்கிற வகையில் ஏற்படும் மாற்றம்.
‘தாளப் பிசகு’