தமிழ் பிசிர் யின் அர்த்தம்

பிசிர்

பெயர்ச்சொல்

 • 1

  (துணி, மரத் துண்டு முதலியவற்றிலிருந்து) தனித்துத் தெரியும் அளவுக்கு ஒழுங்கற்றுத் திரிதிரியாகவோ அல்லது சிறுசிறு முனைகளாகவோ நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி.

  ‘சட்டை கிழிந்து பிசிர்பிசிராக நூல் தொங்கியது’
  ‘சட்டத்தை இவ்வளவு இழைத்தும் சில இடங்களில் பிசிர் இருக்கிறது’
  ‘செப்புத் தகட்டைப் பிசிர் இல்லாமல் வெட்டு!’

 • 2

  (ஒருவரின் குரல் அல்லது இசைக் கருவியிலிருந்து எழும் ஒலியில்) அடிப்படைத் தொனியோடு இணையாமல் தனித்துத் தெரியும் சீரற்ற ஒலி, கரகரப்பு போன்றவை.

  ‘அவனுடைய குரலில் பிசிர் தட்டியது’
  ‘புல்லாங்குழலின் பிசிரற்ற நாதம் காற்றில் மிதந்து வந்தது’