தமிழ் பிசை யின் அர்த்தம்

பிசை

வினைச்சொல்பிசைய, பிசைந்து

 • 1

  (மாவு, மண் போன்றவற்றைக் கையால்) அழுத்திப் புரட்டி உருட்டுதல்.

  ‘களிமண்ணில் இன்னும் கொஞ்சம் நீர் ஊற்றிப் பிசை’
  ‘பூரிக்கு மாவு பிசைய வேண்டும்’
  ‘பருப்புச் சாதம் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினாள்’
  உரு வழக்கு ‘குற்ற உணர்வு மனத்தைப் பிசைந்தது’

 • 2

  (கண்ணை) கசக்குதல்.

  ‘கண்ணில் தூசு விழுந்தால் கண்ணைப் பிசையக் கூடாது’