தமிழ் பிஞ்சு யின் அர்த்தம்

பிஞ்சு

பெயர்ச்சொல்

 • 1

  (தாவரங்களில்) பூவிலிருந்து தோன்றிய நிலையில் இருக்கும் இளங்காய்/முற்றலாக இல்லாத காய்.

  ‘பிஞ்சும் காயுமாக இருந்த மாமரம்’
  ‘கத்திரிக்காய் பிஞ்சாகப் பார்த்து எடு’

 • 2

  (பெயரடையாக) (பெரும்பாலும் குழந்தைகளைக் குறித்து வரும்போது) மென்மையான/இளம்.

  ‘குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் பொம்மையை எடுத்தது’
  ‘பிஞ்சுப் பருவத்தில் இந்தச் சிறுவனுக்கு இவ்வளவு சுமையா?’
  உரு வழக்கு ‘அம்மாவைப் பார்க்காமல் அந்தப் பிஞ்சு மனசு எவ்வளவு வேதனைப்படும்?’