தமிழ் பிடித்துக்கொள் யின் அர்த்தம்

பிடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    தன்னிடம் சொன்னதை மற்றவர் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தல்.

    ‘கடற்கரைக்குப் போகலாம் என்று தெரியாத்தனமாக என் பையனிடம் சொல்லி விட்டேன். அதைப் பிடித்துக்கொண்டு இப்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான்’

  • 2

    ஒன்றை நன்றாக மனத்தில் பதித்து வைத்துக்கொள்ளுதல்.

    ‘என் பெண்ணிடம் ஒரு தரம் சொன்னால் போதும், அப்படியே பிடித்துக்கொள்வாள்’