தமிழ் பிடித்த பிடி யின் அர்த்தம்

பிடித்த பிடி

பெயர்ச்சொல்

  • 1

    தன் நிலையிலிருந்து மாற மறுக்கும் பிடிவாதம்.

    ‘நம் குடும்பக் கஷ்டத்தையெல்லாம் சொன்ன பிறகும், நீ பிடித்த பிடியிலேயே இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?’
    ‘நம் வசதிக்கு இந்த இடம்தான் ஒத்துவரும் என்று சொல்லிவிட்டேன். அப்படியும் நீ பிடித்த பிடியை விட மாட்டேன் என்கிறாய்’