தமிழ் பிடுங்கு யின் அர்த்தம்

பிடுங்கு

வினைச்சொல்பிடுங்க, பிடுங்கி

 • 1

  (ஓர் இடத்தில் பதிந்திருப்பதை அல்லது ஒருவர் வைத்திருப்பதை) விசையுடன் அகற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல்; பறித்தல்.

  ‘மாட்டுக்குக் கொஞ்சம் வைக்கோல் பிடுங்கிப் போடு’
  ‘அந்தக் கம்பத்தைப் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும்’
  ‘குரங்கு பழத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடியது’
  ‘இன்று பல் பிடுங்குவதற்குப் போக வேண்டும்’
  ‘தென்னங்கன்றைப் பிடுங்கி நடு’

 • 2

  (பணம்) அதிக அளவில் வாங்குதல்; பறித்தல்.

  ‘மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்குகிறார்கள்’
  ‘ஏதாவது காரணம் சொல்லிப் பணம் பிடுங்காதே’

 • 3

  தடுப்பை நீக்கி (காற்றை) வெளியேற்றுதல்.

  ‘சைக்கிள் சக்கரத்திலிருந்த காற்றை யாரோ பிடுங்கிவிட்டிருக்கிறார்கள்’

 • 4

  (கொசு முதலியவை கடிப்பதன்மூலம்) மிகுந்த அளவில் தொல்லை தருதல்/(தொல்லைப்படுத்தி) நச்சரித்தல்.

  ‘திண்ணையில் படுக்க முடியாமல் கொசு பிடுங்குகிறது’

 • 5

  (பயம், வெட்கம் முதலியவை) அதிக அளவில் பாதித்தல்.

  ‘பயம் அவனைப் பிடுங்க ஆரம்பித்தது’

 • 6

  வட்டார வழக்கு (காய், பழம் போன்றவற்றை) பறித்தல்.

  ‘முருங்கை மரம் வளர்ந்துவிட்டதால் காய் பிடுங்கக் கஷ்டமாக இருக்கிறது’