தமிழ் பிண்டம் யின் அர்த்தம்

பிண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    வடிவம் இல்லாத சதைத் திரள்.

    ‘நெஞ்சில் முளைத்த கையுடனும் விரல் அளவு கால்களுடனும் பிண்டமாக இறந்தே பிறந்தது குழந்தை’

  • 2

    (இறந்தவர்களுக்குப் படைக்கும்) அரிசியைச் சேர்த்துப் பிடித்த அல்லது சோற்றைப் பிடியாகப் பிடித்த உருண்டை.

    ‘திதிக்காகப் பிண்டம் பிடித்து வைத்திருந்தார்’