தமிழ் பிதுக்கு யின் அர்த்தம்

பிதுக்கு

வினைச்சொல்பிதுக்க, பிதுக்கி

 • 1

  (அடைத்து வைத்திருக்கும் அல்லது மூடியிருக்கும் ஒன்றை வெளியே தள்ள) பக்கவாட்டில் அழுத்துதல்.

  ‘பருவைப் பிதுக்கிச் சீழை வெளியேற்றினான்’
  ‘வேக வைத்த மொச்சைக் கொட்டையைப் பிதுக்கியதும் தோல் தனியாக வந்தது’

 • 2

  (கீழ் உதட்டை) முன் தள்ளுதல்.

  ‘குழந்தை உதட்டைப் பிதுக்கியபோது பார்க்க அழகாக இருந்தது’