தமிழ் பிதுங்கு யின் அர்த்தம்

பிதுங்கு

வினைச்சொல்பிதுங்க, பிதுங்கி

  • 1

    (அடைத்து வைக்கப்பட்டிருப்பது அல்லது மூடப்பட்டிருப்பது) அழுத்தப்படுவதால் வெளிவருதல் அல்லது வெளியே தள்ளப்படுதல்.

    ‘கண்டதெல்லாம் வைத்து அடைத்துப் பை பிதுங்கிக்கொண்டிருக்கிறது’
    ‘பேருந்தில் கூட்டம் பிதுங்கி வழிந்தது’
    ‘பேருந்தில் அடிபட்ட நாய் குடல் பிதுங்கி இறந்து கிடந்தது’