தமிழ் பிந்து யின் அர்த்தம்

பிந்து

வினைச்சொல்பிந்த, பிந்தி

 • 1

  (ஓடுதல், நடத்தல் போன்ற செயல்களில் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு) இணையான வேகத்தில் செல்ல முடியாமல் (அவருக்கு அல்லது அதற்கு) பின்னால் சென்றுகொண்டிருத்தல்.

  ‘இரண்டு குதிரைகளும் ஒன்றையொன்று முந்துவதும் பிந்துவதுமாக ஓடிக்கொண்டிருந்தன’

 • 2

  காலம் கடந்து நிகழ்தல்.

  ‘இந்த வருடமும் பருவமழை பிந்திவிட்டது’
  ‘நான் சற்றுப் பிந்திவிட்டேன். இல்லையென்றால் அந்த வேலை எனக்குக் கிடைத்திருக்கும்’