தமிழ் பின் யின் அர்த்தம்

பின்

பெயர்ச்சொல்

 • 1

  (இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையிலோ ஒன்றின் மறுபுறத்திலோ இருப்பது; ஒரு பொருள், இடம் முதலியவற்றின் இறுதிப் பகுதியாகவோ முடிவாகவோ இருப்பது.

  ‘பின் இருக்கையில் இரண்டு பேர் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர்’
  ‘கீழே விழுந்ததில் பின்தலையில் சரியான அடி!’
  ‘புத்தகத்தின் பின்பக்கம் விலை போட்டிருக்கிறதா என்று பார்த்தான்’
  ‘வண்டி பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது’
  ‘பேருந்தின் பின்பகுதியில் கட்சிக் கொடியைக் கட்டியிருந்தார்கள்’
  ‘கரப்பான், தேள் ஆகிய இரண்டில் முன்னது விஷமற்றது; பின்னது விஷமுடையது’

 • 2

  (காலத்தைக் குறித்து வரும்போது) முன் உள்ளதற்கு அடுத்து அல்லது இறுதியாக வருவது.

  ‘நாடகத்தின் பின்பகுதி அவ்வளவு நன்றாக இல்லை’
  ‘நான் முன்பு குறிப்பிட்ட இரண்டு விஷயங்களில் பின்னதைப் பற்றிதான் இப்போது பேசப்போகிறேன்’

தமிழ் பின் யின் அர்த்தம்

பின்

வினையடை

 • 1

  பின்னால்.

  ‘காலைச் சற்றுப் பின் வைத்துவிட்டுத் தடுமாறி விழுந்தான்’

தமிழ் பின் யின் அர்த்தம்

பின்

இடைச்சொல்

 • 1

  (நான்காம் வேற்றுமை உருபைத் தொடர்ந்து வரும்போது) காலத்தில் ஒன்றை அடுத்து இன்னொன்று நிகழ்வதையும் இடத்தில் ஒன்றின் முன்பக்கத்துக்கு எதிரான பக்கத்தில் இன்னொன்று இருப்பதையும் உணர்த்தப் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘பின்னால்’.

  ‘குழந்தை கதவுக்குப் பின் ஒளிந்துகொண்டிருந்தது’
  ‘என் பின் நாய் ஓடி வந்தது’
  ‘சுதந்திரத்துக்குப் பின் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது’