தமிழ் பின்தங்கு யின் அர்த்தம்

பின்தங்கு

வினைச்சொல்பின்தங்க, பின்தங்கி

 • 1

  (கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) வளர்ச்சி என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்.

  ‘நாடு பின்தங்கிவிட்டது என்று பொதுப்படையாகச் சொன்னால் எப்படி?’
  ‘தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்துள்ளது’

 • 2

  (விளையாட்டில்) (ஒரு அணி) தோல்வி காணும் நிலையில் இருத்தல்.

  ‘இடைவேளை வரை 2-3 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த அணி பிறகு சுறுசுறுப்பாக ஆடி வெற்றிபெற்றது’