தமிழ் பின்தொடர் யின் அர்த்தம்

பின்தொடர்

வினைச்சொல்-தொடர, -தொடர்ந்து

 • 1

  (ஒருவர் அல்லது ஒன்று செல்லும் திசையிலேயே அவரை அல்லது அதனை) இலக்காகக் கொண்டு பார்வையிலிருந்து நழுவவிடாமல் பின்னால் செல்லுதல்.

  ‘காவலர்கள் தீவிரவாதியைப் பல நாட்களாகப் பின்தொடர்ந்து கடைசியில் கைதுசெய்தனர்’
  ‘நிழல்போல் பின்தொடர்ந்து வருகிறான்’
  உரு வழக்கு ‘நீ செய்த பாவம் உன்னைப் பின்தொடராமல் இருக்குமா?’

 • 2

  பின்பற்றுதல்.

  ‘விடுதலைப் போராட்டத்தில் காந்தியைப் பின்தொடர்ந்தவர்கள் பலர்’