தமிழ் பின்னடை யின் அர்த்தம்

பின்னடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

 • 1

  பின்தங்குதல்.

  ‘புதிய நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளே நிறுவனத்தின் செயல்திறனைப் பின்னடையச் செய்கின்றன’
  ‘நம் நாடு தொழில் துறையில் முன்னேறியுள்ளபோதும் பிற துறைகளில் பின்னடைந்துவிடவில்லை’

 • 2

  பின்வாங்குதல்.

  ‘நெருப்பின் வெம்மை முகத்தைத் தாக்கியவுடன் பின்னடைந்தான்’
  ‘கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு பின்னடையும் என்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடத் தயங்க மாட்டோம்’