தமிழ் பின்னடைவு யின் அர்த்தம்

பின்னடைவு

பெயர்ச்சொல்

 • 1

  முன்னேற்றத்தைத் தடை செய்யும் வகையிலான பாதிப்பு.

  ‘குணம் பெற்றுவந்த நோயாளியின் உடல் நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது’
  ‘அணுமின் நிலைய விபத்து விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவு’

 • 2

  பின்தங்கிய நிலை.

  ‘தொழில் வளர்ச்சியில் நாட்டின் பின்னடைவு குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார்’