தமிழ் பின்னல் யின் அர்த்தம்

பின்னல்

பெயர்ச்சொல்

  • 1

    பின்னப்பட்ட முடி; சடை.

    ‘சடையைப் பின்னி ஒற்றைப் பின்னல் போட்டுக்கொண்டாள்’

  • 2

    நூல், இழை முதலியவை கொண்டு பின்னும் கைவேலை.

    ‘தையல், பின்னல், பூவேலை எல்லாம் என் பெண்ணுக்குத் தெரியும்’