தமிழ் பின்னே யின் அர்த்தம்

பின்னே

வினையடை

 • 1

  பிறகு; பின்னால்; பின்.

  ‘பின்னே பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவைத்ததால் வேலைகள் குவிந்துவிட்டன’
  ‘பின்னே எதுவும் நடந்தால் என்னைக் குறை சொல்லாதே’

தமிழ் பின்னே யின் அர்த்தம்

பின்னே

இடைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ‘பிறகு’ என்பதன் இரண்டு பொருளிலும் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘‘அவனுக்கு இடமாற்றம் கிடைக்கும் என்று உங்களுக்கு முன்பே தெரியும் அல்லவா?’ ‘பின்னே, எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்குமா?’’
  ‘இங்குதான் நீங்கள் ஏற்கனவே வந்திருக்கிறீர்களே. பின்னே ஏன் இந்தத் தயக்கம்?’