தமிழ் பின்பற்று யின் அர்த்தம்

பின்பற்று

வினைச்சொல்பின்பற்ற, பின்பற்றி

 • 1

  (வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை) நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்; கடைப்பிடித்தல்.

  ‘அகிம்சை வழியைப் பின்பற்றி மக்கள் போராட வேண்டும் என்று காந்தி கேட்டுக்கொண்டார்’
  ‘காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பழக்கவழக்கங்களை எளிதில் மாற்ற முடியாது’
  ‘யார் சொன்னதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது’
  ‘ஜப்பானியச் சாகுபடி முறை இந்தப் பகுதியில் பின்பற்றப்படுகிறது’
  ‘கிரீன்விச் நேர முறையைத்தான் உலகெங்கும் பின்பற்றுகிறார்கள்’

 • 2

  பின்தொடர்தல்.

  ‘அவர்களைப் பின்பற்றி நானும் குகைக்குள் சென்றேன்’