தமிழ் பின்விளைவு யின் அர்த்தம்

பின்விளைவு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செயலின் காரணமாக ஏற்படும் விரும்பத் தகாத விளைவு.

  ‘பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நடுநிலையில் நின்று தீர்ப்புக் கூற வேண்டும்’
  ‘அதிகாரியைப் பகைத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்துப்பார்’

 • 2

  (மருந்து, கதிரியக்கம் போன்றவற்றால்) பின்னாளில் ஏற்படும் பாதிப்பு.

  ‘நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் வலி நிவாரணிகளால் அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும்’
  ‘கதிரியக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் கொடூரமானவை’