தமிழ் பிம்பம் யின் அர்த்தம்

பிம்பம்

பெயர்ச்சொல்

 • 1

  (நீர், கண்ணாடி போன்றவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்.

  ‘காற்றால் நீர் அசைந்தபோது நிலவின் பிம்பமும் அசைந்தது’

 • 2

  தொலைக்காட்சி, திரை, புகைப்படம் போன்றவற்றில் பார்க்கப்படும் உருவம் அல்லது தோற்றம்.

  ‘திரையில் பிம்பங்கள் மங்கலாகத்தான் தெரிந்தன’

 • 3

  ஒருவரைப் பற்றிப் பிறரிடம் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த எண்ணம்.

  ‘நடிகர் என்ற பிம்பத்தை மீறி அவரால் அரசியலில் வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை’
  ‘அவர் பெரிய சிந்தனையாளர் என்கிற பிம்பம் என்னுள் எப்போதே சிதைந்துவிட்டது’