தமிழ் பிய் யின் அர்த்தம்

பிய்

வினைச்சொல்பிய்ய, பிய்ந்து, பிய்க்க, பிய்த்து

 • 1

  (தைக்கப்பட்டிருக்கும், ஒட்டியிருக்கும், இணைந்திருக்கும் நிலையிலிருந்து துணி, தோல், காகிதம் போன்றவை) பிரிந்துபோதல்; கிழிதல்.

  ‘போன மாதம் வாங்கிய செருப்பு அதற்குள் பிய்ந்துவிட்டது’
  ‘ஒட்டிய அட்டைகள் எல்லாம் பிய்ய ஆரம்பித்துவிட்டன’
  ‘செவிப்பறையே பிய்ந்துவிடும் அளவுக்குச் சத்தம் கேட்டது’

தமிழ் பிய் யின் அர்த்தம்

பிய்

வினைச்சொல்பிய்ய, பிய்ந்து, பிய்க்க, பிய்த்து

 • 1

  (தைக்கப்பட்டிருக்கும், ஒட்டியிருக்கும், இணைந்திருக்கும் நிலையிலிருந்து துணி, காகிதம் போன்றவற்றை) பிரித்தல்; கிழித்தல்.

  ‘குழந்தை புத்தகத்தைப் பிய்த்துவிட்டது’
  ‘சுவரொட்டிகளையெல்லாம் பிய்க்க ஆரம்பித்தார்கள்’
  ‘‘தோலைப் பிய்த்துவிடுவேன்’ என்று மிரட்டினான்’

 • 2

  (உணவுப் பொருள் போன்றவற்றை) பிடுதல்.

  ‘குழந்தைக்குத் தோசையைத் தட்டில் பிய்த்துப்போட்டுக் கொடுத்தாள்’
  ‘வடையைப் பிய்த்துப் பார்த்தபோது அது ஊசிப்போயிருப்பது தெரிந்தது’