தமிழ் பிய்த்துப் பிடுங்கு யின் அர்த்தம்

பிய்த்துப் பிடுங்கு

வினைச்சொல்பிடுங்க, பிடுங்கி

  • 1

    (ஒருவர்) விடாமல் தனக்கு வேண்டியதைக் கேட்டு நச்சரித்தல்.

    ‘என் மகனிடம் சைக்கிள் வாங்கித்தருகிறேன் என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். உடனே வேண்டும் என்று பிய்த்துப் பிடுங்குகிறான்’
    ‘அவனுடைய வியாபாரத்துக்கு அவசரமாக ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறதாம். என்னைப் போட்டுப் பிய்த்துப் பிடுங்கிக்கொண்டிருக்கிறான்’