தமிழ் பிரகாசி யின் அர்த்தம்

பிரகாசி

வினைச்சொல்பிரகாசிக்க, பிரகாசித்து

 • 1

  ஒளி வீசுதல்; (ஒளி வீசி) மினுங்குதல்.

  ‘நிலவு வானத்தில் பிரகாசித்தது’
  ‘ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வைரங்கள்’
  உரு வழக்கு ‘அவருடைய எழுத்தில் உண்மையும் நேர்மையும் பிரகாசித்தன’

 • 2

  சிறந்து விளங்குதல்.

  ‘இவருடைய புதல்வர்கள் மூவருமே பிற்காலத்தில் திரையுலகில் பிரகாசித்தனர்’