தமிழ் பிரச்சாரம் யின் அர்த்தம்

பிரச்சாரம்

பெயர்ச்சொல்

 • 1

  (மதம், கொள்கை போன்றவற்றை) பிறரிடையே பரப்பும் செயல்.

  ‘குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம்’
  ‘இவரது படைப்புகளில் கலையைவிடப் பிரச்சாரத் தன்மைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது’
  ‘மதப் பிரச்சாரம்’

 • 2

  (தேர்தலுக்காகக் கட்சிகள் பேச்சு, எழுத்து முதலியவற்றின் மூலமாக மக்களிடம்) வாக்குக் கோரும் செயல்.

  ‘தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டவுடன் கட்சிகள் முழுமூச்சாகப் பிரச்சாரத்தில் இறங்கின’