தமிழ் பிரச்சினை யின் அர்த்தம்

பிரச்சினை

பெயர்ச்சொல்

 • 1

  (தீர்வு தேவைப்படும்) நெருக்கடியான நிலைமை.

  ‘என் குடும்பத்தில் பல பிரச்சினைகள்’
  ‘பணப் பிரச்சினைதான் எனக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது’
  ‘இன்றைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறித்த கருத்தரங்கம்’
  ‘எய்ட்ஸ் நோய் இன்று இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது’

 • 2

  (இருவர் அல்லது பலரிடையே ஏற்படும்) தகராறு அல்லது ஒன்றைக் குறித்து இணக்கம் இல்லாத நிலை.

  ‘உங்கள் இரண்டு பேருக்கிடையில் என்ன பிரச்சினை?’
  ‘நேற்று எனக்கும் அண்ணனுக்கும் இடையில் பிரச்சினையாகிவிட்டது’
  ‘பிரச்சினையை உண்டுபண்ணுவதற்கென்றே சிலர் நம் கூட்டத்திற்கு வருகின்றனர்’

 • 3

  விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

  ‘பாலியல் கல்வி வேண்டுமா? வேண்டாமா? இதுதான் நாம் இன்று விவாதிக்கப்போகும் பிரச்சினை’
  ‘மொழியியல் குறித்த சில பிரச்சினைகளைப் பற்றி நேற்று நானும் அவரும் பேசினோம்’