தமிழ் பிரசுரம் யின் அர்த்தம்

பிரசுரம்

பெயர்ச்சொல்

 • 1

  (அச்சு வடிவிலான) வெளியீடு.

  ‘நம் பிரசுரங்கள் அனைத்தும் வேண்டும் என்று கேட்டார்’
  ‘அரசுப் பிரசுரம்’
  ‘இது யாருடைய பிரசுரம்?’
  ‘எங்கள் ஊரில் பிரசுர வசதி கிடையாது’
  ‘இது ஒரு மலிவுப் பிரசுரம் ஆகும்’

 • 2

  அருகிவரும் வழக்கு பதிப்பகம்.

  ‘அந்தப் புத்தகத்தை அருந்ததி பிரசுரம் வெளியிட்டிருந்தது’
  ‘பிரேமா பிரசுரம்’