தமிழ் பிரத்தியட்சம் யின் அர்த்தம்

பிரத்தியட்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு கண்ணுக்குத் தெரியும் நிலை.

  ‘முனிவர் முன்னே சிவபெருமான் பிரத்தியட்சமானார்’
  ‘அறிவியல்மூலம் மனித குலம் அடைந்துகொண்டிருக்கும் நன்மைகளை மட்டுமல்ல தீமைகளையும் நாம் பிரத்தியட்சமாகக் காணலாம்’

 • 2

  அருகிவரும் வழக்கு நிதர்சனம்; வெளிப்படை.

  ‘நீ சொல்வது பிரத்தியட்சமான உண்மை’
  ‘அவரது பொருளாதாரக் கோட்பாடுகள் பிரத்தியட்ச நிலைமைக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன’