தமிழ் பிரத்தியேகம் யின் அர்த்தம்

பிரத்தியேகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட ஒருவருக்கோ ஒன்றுக்கோ உரியது; விசேஷம்.

  ‘அவர் எங்கு சென்றாலும் பிரத்தியேக மரியாதை தந்தார்கள்’
  ‘இது பிரதமருக்கான பிரத்தியேக விமானம்’
  ‘நம் நாட்டிற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மருந்து’
  ‘வேலை பார்க்கும் பெண்களுக்கென்றே பிரத்தியேகமான சில தொல்லைகள் உண்டு’
  ‘புதுப் படத்தின் பிரத்தியேகக் காட்சி அவருக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது’