தமிழ் பிரதிபலி யின் அர்த்தம்

பிரதிபலி

வினைச்சொல்பிரதிபலிக்க, பிரதிபலித்து

 • 1

  கண்ணாடி, நீர்ப்பரப்பு போன்றவற்றில் ஒளி பட்டுத் திரும்பி வருதல்/(கண்ணாடி, நீர்ப் பரப்பு போன்றவை தன் மேல்) படும் ஒளியை அல்லது உருவத்தை அப்படியே காட்டுதல்.

  ‘தகரத்தில் பட்டுப் பிரதிபலித்த ஒளியினால் கண் கூசியது’
  ‘உடைந்திருந்த கண்ணாடியின் ஒவ்வொரு துண்டும் ஓர் உருவத்தைப் பிரதிபலித்தது’

 • 2

  (ஒரு தன்மை, உணர்வு போன்றவை ஒன்றின் ஊடாக) வெளிப்படுதல்/(ஒரு தன்மை, உணர்வு போன்றவற்றை ஒன்று குறிப்பிட்ட விதத்தில்) வெளிப்படுத்துதல்.

  ‘அவள் உபசரிப்பில் பிரதிபலித்த அன்பு அவனை நெகிழச்செய்தது’
  ‘பேச்சு அவர் உள்நோக்கத்தைப் பிரதிபலித்தது’
  ‘அறிவியலில் ஏற்படும் மாற்றங்களை மொழியும் பிரதிபலிக்கிறது’