தமிழ் பிரபலம் யின் அர்த்தம்

பிரபலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்று அல்லது ஒருவர் பலர் மத்தியில் அறியப்பட்டிருக்கும் அல்லது புகழ் பெற்றிருக்கும் நிலை.

  ‘பிரபல எழுத்தாளர்’
  ‘இவர் ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர்’
  ‘பிரபலக் கேடி சுட்டுக்கொலை’
  ‘பலாப் பழத்துக்கு இந்த ஊர் மிகவும் பிரபலம்’

 • 2

  (பொதுவாகப் பன்மையில்) பொதுமக்களிடையே பரவலாக அறியப்பட்டவர்; புகழ்பெற்றவர்; ஒரு துறையில் சிறந்து விளங்குவதால் பலரிடையே புகழ் பெற்றிருக்கும் நபர்.

  ‘பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது’
  ‘தீபாவளியை முன்னிட்டுத் தொலைக்காட்சியில் பிரபலங்களின் பேட்டி ஒளிபரப்பாகும்’

 • 3

  புதிதாக ஒன்று அறிமுகமாகிப் பலராலும் பின்பற்றப்படும் நிலை.

  ‘புதுவகையான உடைகள் கல்லூரி மாணவிகளிடையே பிரபலமாகிவருகின்றன’
  ‘இந்தியாவில் கால்பந்தாட்டம் இப்போது பிரபலமாகிவருகிறது’