தமிழ் பிரபு யின் அர்த்தம்

பிரபு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு செல்வந்தர்.

  ‘இந்த மாதிரியான வைரம் பிரபுக்களிடம்தான் இருக்கும்’
  ‘அந்தக் காலத்தில் அரசர்களும் பிரபுக்களும் இசைக் கலைஞர்களை ஆதரித்தனர்’

 • 2

  அருகிவரும் வழக்கு மதிப்பில் சிறந்தவரையோ அதிகாரமும் செல்வமும் உடையவரையோ அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘மந்திரி அரசரை நோக்கி ‘பிரபு! ஒரு விண்ணப்பம்’ என்று கூறத் தொடங்கினார்’
  ‘‘ஐயா தர்மப் பிரபு! நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்’ என்று அவர் வேண்டினார்’

 • 3

  அருகிவரும் வழக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உயர் பதவிகளை வகிப்பவர் பெயருக்கு முன்பு சேர்க்கப்பட்ட பட்டம்.

  ‘டல்ஹௌசி பிரபு’
  ‘மவுண்ட்பேட்டன் பிரபு’

 • 4

  அருகிவரும் வழக்கு இங்கிலாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் சமூகத்தில் அல்லது அதிகாரத்தில் உயர்ந்த இடத்தை வகிப்பவருக்கு வழங்கப்படும் பட்டம்.

  ‘போப்பாண்டவருடைய வேண்டுகோளின் பேரில் ஐரோப்பாவில் உள்ள சிற்றரசர்களும் பிரபுக்களும் முதல் சிலுவைப் போரில் ஈடுபட்டார்கள்’