தமிழ் பிரமாதப்படுத்து யின் அர்த்தம்

பிரமாதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (சிறிய விஷயத்தை) பெரிதுபடுத்துதல்.

    ‘குழந்தை காசைத் தொலைத்துவிட்டது. அதைப் போய்ப் பிரமாதப்படுத்துகிறீர்களே!’

  • 2

    (ஒன்றை) மெச்சும் அளவுக்குச் சிறப்பாகச் செய்தல்.

    ‘தோரணங்கள், அலங்கார வளைவுகள், பிரம்மாண்டமான பந்தல் என்று வேலூர் மாநாட்டைத் தொண்டர்கள் பிரமாதப்படுத்திவிட்டார்கள்’